புகையிலை விற்ற 3 பேர் கைது


புகையிலை விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 12:32 AM IST (Updated: 30 July 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி,ஜூலை
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் சாத்தூர் ரோட்டில் உள்ள மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பாபு (வயது 47) என்பவரை கைது செய்தார். இதே போல் மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி துரைச்சாமிபுரம் பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை விற்ற முருகன் (40) என்பவரை கைது செய்தார். 
திருத்தங்கல் பகுதியில் அய்யாதுரை (38) என்பவரும் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (53) என்பவர் மீது தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story