20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
20 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அந்தவகையில் நேற்று கரூர் பகுதியில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயனூர் பகவதியம்மன் கோவில் அலுவலகம், வடக்கு பிரதட்சனம் சாலை, தாந்தோணிமலை நாயுடு மஹால், பாலம்மாள்புரம் தொடக்கப்பள்ளி, கருப்பகவுண்டன்புதூர் பகவதியம்மன் கோவில் வளாகம், புகளூர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, வெண்ணைமலை அரசுப்பள்ளி, நொய்யல் வேட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேலுச்சாமிபுரம் அரசுப்பள்ளி உள்பட 20 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் காலை முதல் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story