மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி + "||" + Awareness

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கரூர்
மின் விபத்தை தவிர்க்க பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேற்பார்வை பொறியாளர் செந்தில்ராஜன் தலைமை தாங்கினார். இதில் 24 மணி நேரமும் இயங்கும் மின் நுகர்வோர் சேவை மைய எண்ணில் 9498794987 மின் சம்பந்தப்பட்ட அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம். மேலும் மின் தடை புகார்களுக்கு கரூர் மையம் எண். 1912 -க்கு தொடர்புகொள்ளலாம். மேலும் தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. மின்கம்பம் தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது. மின்மாற்றிகள், மின்தடைகள், மின்பகிர்வு பெட்டிகள் ஸ்டே வயர் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகளிலோ, மின் கம்பங்களிலோ தன்னிச்சையாக எந்த பணிகளும் மேற்கொள்ள வேண்டாம். இடி, மின்னலின் போது மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பிவேலி ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்சுகள், பிளக்குகள் மற்றும் மின்சாதனங்கள் போன்றவற்றை இயக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு கூறினார். மேலும் இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு எப்படி பாதுகாப்பாக பணிபுரிவது தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி கையாள்வது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் உதவி செயற்பொறியாளர் சரவணன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
2. திருச்சி மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள்
திருச்சி மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன
3. எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு நடனம்
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் போலீசார் நடனம் ஆடி பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
4. கொரோனா விழிப்புணர்வு
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
5. தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.