மாவட்ட செய்திகள்

கோவிலில் திருட முயற்சி + "||" + Attempt to steal from the temple

கோவிலில் திருட முயற்சி

கோவிலில் திருட முயற்சி
பழனி அருகே கோவிலில் திருட முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி : 

பழனி அருகே கீரனூரில் கண்டியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர் ஒருவர், கோவிலின் கதவை உடைத்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, காவலாளி அங்கு வருவதை அறிந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.