இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம் கி.வீரமணி அறிக்கை


இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம் கி.வீரமணி அறிக்கை
x
தினத்தந்தி 30 July 2021 4:16 AM IST (Updated: 30 July 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம் கி.வீரமணி அறிக்கை.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல், இந்தியும், அதன் தாயான சமஸ்கிருதத்தையும் வேக வேகமாகத் திணிப்பதிலேயே முனைப்பு காட்டி வருகின்றது. எங்கும் இந்தி, எதிலும் இந்தி, கூடுதல் நிதியை செம்மொழி தகுதி பெற்றிருந்த தமிழுக்குக் கிள்ளிக் கொடுப்பதும், சமஸ்கிருதத்திற்கு அள்ளிவாரிக் கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது இந்த பா.ஜ.க. மத்திய ஆட்சியில்.

2017 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643.84 கோடி. அதேநேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா மொழிகள் அனைத்திற்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகையோ ரூ.29 கோடி மட்டுமே.

தனக்கே இந்தி தெரியாது என்று உண்மையைக் கூறிய நீதிபதி, இந்தி எதிர்ப்புப் பின்னணியிலிருந்து அப்பதவிக்கு வந்தவர் அல்ல, அவருக்கே இந்தத் திணிப்பு இவ்வளவு வேதனையைத் தந்துள்ளது என்கிறபோது, மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படும் என்பதை மத்திய அரசு எண்ணிப் பார்க்க வேண்டாமா?. இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story