சேவூர் பகுதியில் இயக்கப்படும் டவுன்பஸ்களில் வேறு ஊர்களின் பெயர்கள் எழுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சேவூர் பகுதியில் இயக்கப்படும் டவுன்பஸ்களில் வேறு ஊர்களின் பெயர்கள் எழுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 30 July 2021 7:58 PM IST (Updated: 30 July 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

சேவூர் பகுதியில் இயக்கப்படும் டவுன்பஸ்களில் வேறு ஊர்களின் பெயர்கள் எழுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சேவூர்:
சேவூர் பகுதியில் இயக்கப்படும் டவுன்பஸ்களில் வேறு ஊர்களின் பெயர்கள் எழுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 
டவுன்பஸ்
 சேவூர் ஊராட்சியில், ராக்கம்பாளையம், கிளாகுளம், சந்தையப்பாளையம், காமராஜ் நகர், பாளியக்காடு, ஒச்சம்பாளையம், கன்னடாங்குளம் ஆகிய பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள முறியாண்டாம்பாளையம், பாப்பாங்குளம், வேட்டுவ பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சேவூருக்கு வந்துதான் மற்ற ஊர்களுக்கு பஸ் ஏறி செல்ல முடியும்.  இப்பகுதி மக்கள் பெரும்பாலனோர் பனியன் தொழிலையே நம்பி உள்ளனர். சேவூரில் இருந்து திருப்பூர் செல்ல பயணிகள் டவுன்பஸ்களை நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருப்பூரிலிருந்து சேவூர் மற்றும் பஞ்சலிங்கம்பாளையம் வரை செல்லும் வழித்தடம் எண் - 9 டவுன் பஸ்சுக்காக புறநகர் பஸ்சை டவுன் பஸ்சாக மாற்றி உள்ளனர்.   மேலும் பஸ் முமுவதும்  பெயிண்டிங் மாற்றப்பட்டிருந்தாலும், பஸ்சின் இருபுறமும் உள்ள ஜன்னலோர மேல் பகுதியில் இப்பகுதி ஊரின் பெயருக்கு பதிலாக வேறு பகுதியின் ஊரின் பெயர்கள் (புறநகர் பேருந்தாக இருந்த போது) சேலம், ஈரோடு, காங்கேயம், தாராபுரம், பழநி, என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பஸ்சின் பின்புறம் பழனி, அரச்சலூர், காங்கேயம், சங்ககிரி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் குழப்பம்
இதனால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். பஸ்சில் ஏறும் முன் இப்பேருந்து எங்கே செல்கிறது என அருகில் இருப்பவர்களை கேட்டு ஏறுகிறார்கள். இதனால் உடனடியாக போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்தில் உள்ள பெயர்களை சீரமைக்கு வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story