பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
கோவில்பட்டியில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ேகாவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஒருவர் பொதுமக்களிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டலில் ஈடுபட்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வம் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மாரிச்செல்வம் மீது கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story