மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி ஒருவர் பலி + "||" + One killed in vehicle collision

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி
கயத்தாறு அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் நாற்கரச் சாலையில் அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்கவர், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நரைத்த தலைமுடியுடன் அவர் வாடாமல்லி கலந்த சிவப்பு கலர் சட்டையும், கைலியும் அணிந்துள்ளார். அவர் யார்், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எந்திரம் மீது மோதி ஒருவர் பலி
எந்திரம் மீது மோதி ஒருவர் பலியானார்.
2. மரத்தில் கார் மோதி ஒருவர் பலி
மரத்தில் கார் மோதி ஒருவர் பலியானார்.
3. நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
4. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 70 பேருக்கு தொற்று
5. வாகனம் மோதி ஒருவர் பலி
வீரகேரளம்புதூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.