தாராபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலவலகத்தை பெண்கள்முற்றுகையிட்டனர்.
தாராபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலவலகத்தை பெண்கள்முற்றுகையிட்டனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலவலகத்தை பெண்கள்முற்றுகையிட்டனர்.
முற்றுகை
தாராபுரம் நகராட்சி இறைச்சி மஸ்தான்நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை, சாக்கடை பணிகளுக்காக நகராட்சி நிர்வாகத்தால் சாலைகள் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய் குழாய்கள் உடைந்து குடிநீர் வெளியேறியது. இதனால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த 1 மாதத்திற்கு முன் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் ஒரு மாதங்களைக் கடந்தும் அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்படவில்லை.
இதனால் இறைச்சி மஸ்தான் நகர்ப்பகுதியில் பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் கஷ்டமான சூழலில் ஒரு குடம் ரூ.5க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 1-வது வார்டு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தாராபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு குடிநீர் வழங்கக்கோரி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பெண்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்குவதாக தெரிவித்தனர். பிறகு அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆயிரம் பேர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பெண்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story