எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்; தந்தை-மகன் கைது
பெரியகுளத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகியை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 40). தி.மு.க. நிர்வாகி. இவர் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த காளிதாஸ் (52), அவரது மகன் தினேஷ்குமார் (30) ஆகியோர் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்து தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை லிங்கேஸ்வரன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காளிதாசும், தினேஷ்குமாரும் சேர்ந்து லிங்கேஸ்வரனை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசையும், தினேஷ்குமாரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story