மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது
மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள எட்டிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 45). விவசாயி. இவருக்கு எட்டிகுளத்துப்பட்டியில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் சாலையில் விவசாய தோட்டம் மற்றும் கிணறு உள்ளது. இந்தநிலையில் கிணற்றில் இருந்த மின் மோட்டார் மற்றும் வயர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து காளிதாஸ் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மின் மோட்டார் மற்றும் வயரை திருடியது கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த அற்புததாஸ் (30), ஞானப்பிரகாசம் (28), ஜோலாரன்ஸ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story