சிறுமிகள் பாலியல் பலாத்காரம்


சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 30 July 2021 10:07 PM IST (Updated: 30 July 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, கூடலூரில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் என்ற லோகநாதன்(வயது 28). ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தை உள்ளனர்.

இதற்கிடையில் லோகநாதன், அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடனுக்கு பணம் வாங்குவது, அதனை திரும்ப கொடுப்பது என்ற நிலையில் பழகி வந்தார். இதற்காக அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். 

அப்போது அவருக்கு, அந்த பெண்ணின் மகளான 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளது தாயார், கேரட் அறுவடை பணிக்கு செல்வது வழக்கம்.

அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் அவளை லோகநாதன் சந்தித்து பேசி வந்தார். அப்போது அவளை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. உடனே அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தாயார் அழைத்து சென்றார். அப்போது அவள் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், அவளிடம் விசாரித்தார்.

அப்போது தன்னை மிரட்டி லோகநாதன் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி கதறி அழுதாள். இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, லோகநாதனை போலீசார் கைது செய்தனர். 

இதேபோன்று கூடலூர் அருகே உள்ள அனுமாபுரத்தை சேர்ந்த குமார்(36) என்பவர் 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவளது தாய் பைக்காரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன்(25) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story