திண்டிவனம் அருகே காட்டுப்பன்றி கடித்து முதியவர் சாவு
திண்டிவனம் அருகே காட்டுப்பன்றி கடித்து முதியவர் உயிரிழந்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே ஒலக்கூர் அடுத்த ஏப்பாக்கம் கீழாண்ட தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை தனது ஆடுகளுக்கு, அதே பகுதியில் உள்ள ஒரு சவுக்குமர தோப்பில் தழை பறிக்க சென்றார்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள காப்புகாட்டுக்குள் இருந்து வந்த காட்டுப்பன்றியை செல்வராஜ் துரத்தி உள்ளார். இதில் கோபமடைந்த அந்த கா ட்டுப்பன்றி, செல்வராஜ் மீது பாய்ந்தது.
உடன் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இருப்பினும் காட்டுப்பன்றி அவரை துரத்தி சென்று கடித்து குதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பரபரப்பு
இதற்கிடையே மதியம் வரைக்கும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் சவுக்கு தோப்பு பகுதிக்கு தேடி சென்றனர். அப்போது தான் அவர் அங்கு காட்டுபன்றி கடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, செல்வராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்த செல்வராஜிக்கு ஆதிலட்சுமி(55) என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story