திருக்கோவிலூர் அருகே தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
திருக்கோவிலூர் அருகே தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமம் புதுநகர் குமாரசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 45). தொழிலாளியான இவர் திருப்பூரில் தங்கி இருந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி உறவினர் இறந்த செய்தி கேட்டு ஊருக்கு வந்த வெங்கடேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மூக்கனூர் கிராமத்துக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் வெங்கடேசனின் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த நெக்லஸ், 2 தங்க சங்கிலி என 5 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1¾ லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story