230 பேருக்கு கொரோனா 4 பேர் பலி


230 பேருக்கு கொரோனா 4 பேர் பலி
x
230 பேருக்கு கொரோனா 4 பேர் பலி
தினத்தந்தி 30 July 2021 10:45 PM IST (Updated: 30 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

230 பேருக்கு கொரோனா 4 பேர் பலி

கோவை

 கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று புதிதாக 230 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 106 ஆக உயர்ந்தது.

மேலும் கொரோனாவுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 216 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 13 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். 

இது தவிர கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 85, 65 வயது முதியவர்கள் மற்றும் 75, 66 வயது மூதாட்டிகள் என 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 176 ஆக அதிகரித்தது. தற்போது 1,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மாதம் 20-ந் தேதி ஒரே நாளில் 204 பேருக்கு தொற்று உறுதியானது. அதன் பிறகு 150-க்கும் கீழ் சென்ற தொற்று எண்ணிக்கை தற்போது 200-ஐ கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 479 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 64 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 759 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Next Story