பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 July 2021 10:56 PM IST (Updated: 30 July 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர். 

பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சி

தென்மேற்கு பருவமழையொட்டி மழை வெள்ளம், கட்டிட இடர்பாடுகள் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக தப்பிப்பது குறித்து வருவாய் துறை, தீயணைப்பு துறை சார்பில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்கு தாசில்தார் அரசகுமார் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் பேரிடர் மேலாண்மை குறித்து விளக்கி பேசினார்.

 நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் கட்டிடம் இடிந்து விழுந்ததில், சிக்கியவர்களை எப்படி? காப்பாற்றுவது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். 

செயல் விளக்கம்

பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் இருந்து ஒருவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கொண்டு வருவது போன்றும், கயிற்றை பிடித்துக் கொண்டு தப்பிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. வீட்டில் சிலிண்டரில் தீப்பிடித்தால் அணைப்பது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
மேலும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

 இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் துணை தாசில்தார்கள் சரவணன், சுப்ரியா, கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story