போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 310 பெண்கள் பங்கேற்பு


போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 310 பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 July 2021 11:03 PM IST (Updated: 30 July 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 310 பெண்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை, ஜூலை.31-
போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 310பெண்கள் பங்கேற்றனர்.
உடற்தகுதி தேர்வு
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெண் தேர்வர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.இதில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண் தேர்வர்கள் கலந்து கொண்டனர். தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண்கள் 310 பேர் பங்கேற்றனர். அவர்களது உயரம் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் 207 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிகள்
உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண் தேர்வர்கள் வந்திருந்த நிலையில் இதில் 5 பேர் கர்ப்பமாக இருந்தனர். அவர்கள் கர்ப்பமடைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. இதனால் அந்த 5 கர்ப்பிணிகளை உடல்தகுதி தேர்வில் பங்கேற்க போலீசார்அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.கர்ப்பம் தரித்து 3 மாதங்களுக்குள் இருந்தால் தேர்வில் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆனால் 3மாதங்களுக்குமேலானால்அனுமதிக்கப்படமாட்டார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். உடற்தகுதி தேர்வில் பெண்கள் பலர் உயரம் சற்று குறைவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சிலர் மேல் முறையீடு செய்தனர். அவர்களுக்கு டிஜிட்டல் எந்திரம் முறையில் உயரம் கணக்கிடப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த பணிகளை திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story