முதியவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மையங்களில் முதியவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மையங்களில் முதியவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது.
மதிப்பீட்டு தேர்வு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கற்போம், எழுது வோம் மையம் செயல்பட்டு வருகிறது.
தொப்பம்பட்டி மையத்தின் தன்னார்வலர் சங்கீதா முதியோருக்கு எண்ணும், எழுத்தும் சொல்லி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மையத்திற்கு 20 பேர் வந்து தேர்வு எழுதி வருகிறாா்கள்.
3,740 முதியவர்கள்
அவர்களுக்கு கேள்வி மற்றும் பதில் ஏடு கொடுக்கப்பட்டு குறைந்தபட்ச கற்றல் வெளிபாட்டின் அடிப்படையில் பெயர், முகவரி, படம் பார்த்து பெயரை இணைத்தல், சரியா, தவறா? உள்பட வாழ்க்கை கல்வியை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.
இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
முதியோருக்கான எழுத்தறிவு திறன் மதிப்பீட்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறையில் உள்ள 187 மையங்களில் 3,740 முதியவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
எழுத்தறிவு சான்றிதழ்
இதன் மூலம் முதியவர்கள் தற்போது கையெழுத்து போடவும், பஸ்களில் உள்ள ஊர் பெயர்களை படிக்கவும் செய்கின்றனர். மேலும் 3 நாட்கள் நடைபெறும் தேர்வில் 33 சதவீதம் மதிப்பீடு பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story