தாசில்தார்கள் இடமாற்றம்


தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 July 2021 11:11 PM IST (Updated: 30 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தார்கள் இடமாற்றம்

தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரியும் மாணிக்கவாசகம் காரைக்குடி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே காரைக்குடியில் பணிபுரிந்த அந்தோணிராஜ் தேவகோட்டை தாசில்தாரராக மாற்றப்பட்டார். தேவகோட்டையில் தாசில்தாரராக பணிபுரிந்த ராஜரத்தினம் சிவகங்கை சிப்காட் நில எடுப்பு அலுவலக தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
மேலும் ஏற்கனவே இங்கு பணிபுரிந்த பஞ்சாபகேசன் காரைக்குடி குடிமைப்பொருள் தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். காரைக்குடியில் குடிமைப்பொருள் தனி தாசில்தாரராக பணிபுரிந்த பாலகிருஷ்ணன் காளையார்கோவில் வருவாய் தாசில்தாரராக மாற்றப்பட்டார்.

நேர்முக உதவியாளர்

தேவகோட்டை கோட்டை ஆய அலுவலராக பணிபுரிந்த சிவசம்போ திருப்பத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கிருந்த பஞ்சவர்ணம் இளையான்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக நியமிக்கப்பட்டார். இளையான்குடியில் பணிபுரிந்த செந்தில்வேலு தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக பிறப்பித்து உள்ளார்.

Next Story