ரூ.19½ லட்சத்தில் ஓடைக்கால்வாய் சீரமைப்பு பணி. அமைச்சர்கள் பெரியகருப்பன், காந்தி ஆய்வு
ரூ.19½ லட்சத்தில் ஓடைக்கால்வாய் சீரமைப்பு பணி
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் காவேரிப்பாக்கம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ராமாபுரம் ஓடைக்கால்வாயில் ரூ.19½ லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் கோபால், இயக்குநர் பிரவின்குமார், மகளிர் திட்ட மேலாளர் பல்லவி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சித்ரா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story