விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2021 12:23 AM IST (Updated: 31 July 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சித்திரைச்செல்வன் (வயது 36), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனலட்சுமி அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி, கடந்த 26-ந் தேதி வீட்டில் வைத்து, விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷத்தை) குடித்துள்ளார். இதில் மயங்கிய தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story