மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தவர் கைது
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த இத்திகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 36). நேற்று முன்தினம் இரவு இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைக்கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் குணசேகரன் (49) என்பவர் இருவரையும் கண்டித்து உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த பிச்சையா, இரவு நேரத்தில் குணசேகரன் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்தார். மேலும் குணசேகரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து பிச்சையாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story