14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது


14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 31 July 2021 12:50 AM IST (Updated: 31 July 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரமக்குடி, 
14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 சிறுமிக்கு திருமணம்
ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும், அவரது அத்தை மகனும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் அவர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தெரிந்ததும் சிறுமிக்கும், அவருடைய அத்தை மகனுக்கும் ரகசியமாக திருமணம் செய்து வைத்தனர். 
இந்தநிலையில் கர்ப்பம் அடைந்த சிறுமி, நிறைமாத கர்ப்பிணியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
 அப்போது அந்த சிறுமியின் வயதை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பதிவு செய்வதற்காக விசாரித்துள்ளனர். இதில் அவருக்கு 14 வயதுதான் ஆகி  இருந்தது தெரியவந்தது. இதுபற்றி பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.. 
விசாரணை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, திருமணம் செய்தது தொடர்பாக சிறுமியின் கணவர் மீதும், ரகசியமாக திருமணத்தை நடத்தி வைத்த மேலும் 3 பேர் மீதும் தாலுகா போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story