இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தூரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர்,
சாத்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதார தோல்வி ஏற்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று உண்மைக்கு புறம்பான தகவல் சொன்னதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் தபால் அலுவலகம் முன்பு நகர காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரசார் காதில் பூ சுற்றி கொண்டு கலந்து கொண்டனர். மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜோதிநிவாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக்செய்திருந்தார்.
Related Tags :
Next Story