புறநகர் பஸ் நிலையம்
அருப்புக்கோட்டையில் புறநகர் பஸ்நிலையத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நேருநகரில் நகராட்சி மூலம் ரூ.90 லட்சம் செலவில் நவீன புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிைலயத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். மேலும் பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல்நிலையத்தையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் மேகநாதரெட்டி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் முகமது சாகுல் ஹமீது, உதவி பொறியாளர் காளீஸ்வரி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றியக்குழுத்தலைவர் சசிகலா பொன்ராஜ், துணைத்தலைவர் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், ஒப்பந்தகாரர் நந்தகுமார், மாணவரணி செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த சாமிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story