ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்


ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 30 July 2021 8:23 PM GMT (Updated: 2021-07-31T01:53:12+05:30)

வடமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி அருகே தண்டவாளத்தின் ஓரம் 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இறந்தவர் ஊதா  நிற கட்டம் போட்ட சட்டையும், கருப்பு நிற கால்சட்டையும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. 

இதைத்தொடர்ந்து போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story