டெல்லியில் அமித்ஷாவுடன் சுமலதா எம்.பி. சந்திப்பு
மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவை சுமலதா எம்.பி. நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு:
சட்டவிரோத கல்குவாரிகள்
மண்டியா மாவட்டத்தில் குறிப்பாக கே.ஆர்.எஸ். அணை பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி தொழில்கள் நடைபெறுவதாகவும், அதனால் அந்த அணையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுமலதா எம்.பி. குற்றம்சாட்டினார். அது மட்டுமின்றி நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். சுமலதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயத்தில் குமாரசாமிக்கும், சுமலதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்த சுமலதா, மண்டியாவில் சட்டவிரோத கல் குவாரி தொழில்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசிய சுமலதா, ஒரு கடிதத்தை வழங்கனார்.
உயர்மட்ட விசாரணை
அதில் மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரி தொழில்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், இதனால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், வன விலங்கினங்கள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். கடிதத்தை பெற்றுக்கொண்ட அமித்ஷா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
Related Tags :
Next Story