அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 22 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 134 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 221 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,284 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று 2,318 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 19,680 கோவிஷீல்டு தடுப்பூசியும், 80 கோவேக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
Related Tags :
Next Story