திருச்சி மாநகரில் 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


திருச்சி மாநகரில் 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 31 July 2021 7:42 AM IST (Updated: 31 July 2021 7:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகரில் 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்சி, 

திருச்சி மாநகரில் நேற்று 5 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நவநீதகிருஷ்ணன் கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். 

கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த நீலகண்டன் வெடிப்பொருட்கள் கண்டறிவு பரிவுக்கும், அங்கு பணியாற்றிய ராஜேந்திரன் செக்யூரிட்டி இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். 

மாநகர குற்ற பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயா கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சேரன், மாநகர குற்ற பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.

Next Story