பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது


பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 31 July 2021 7:57 AM IST (Updated: 31 July 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

அல்லித்துறை சாமியாருடன் தொடர்புடைய பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி, 
திருச்சி பொன்மலை உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அத்துமீறி நுழைந்து மதுபாட்டில்களை  எடுத்துச் சென்றதாக பிரபல ரவுடி கொட்டப்பட்டு ஜெய் மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

கடந்த 20-ந்தேதி தனக்கு எதிராக சாட்சி கூற வந்த புகார்தாரருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த வழக்கின் விசாரணையில் கொட்டப்பட்டு ஜெய், போலி சாமியார் பாலசுப்பிரமணியம் மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்ட வக்கீல் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். 

இந்தநிலையில் கொட்டப்பட்டு ஜெய் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரியவந்தது. இதனை தடுக்கும் பொருட்டு பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின் பேரில் கொட்டப்பட்டு ஜெய்யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆணையிட்டார். இதனை தொடர்ந்து நேற்று திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கொட்டப்பட்டு ஜெய்க்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் கொடுத்தனர்.

Next Story