பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய கலெக்டர்


பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய கலெக்டர்
x
தினத்தந்தி 31 July 2021 4:49 PM IST (Updated: 31 July 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைக்கு கலெக்டர் பெயர் சூட்டினார்.

திருவண்ணாமலை

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைக்கு கலெக்டர் பெயர் சூட்டினார். 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23-ந்தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ்நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும், அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். 

அக்குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்ட வரவேற்பு மையத்தில் சேர்க்கப்பட்டது. 

இந்த நிலையில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அந்த பெண் குழந்தைக்கு லட்சுமி என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் முருகேஷ் பெயர் சூட்டி திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார்.

அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story