வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது


வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 July 2021 5:21 PM IST (Updated: 31 July 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம், 

வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேட்டைக்காரனிருப்பு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மெயின் ரோட்டில் சந்தேகம்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாலிபரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். 

இதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர், விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது27) என்பதும். இவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story