நத்தம் பகுதியில் நாவல் பழ சீசன் தொடக்கம் சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்


நத்தம் பகுதியில் நாவல் பழ சீசன் தொடக்கம் சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்
x
தினத்தந்தி 31 July 2021 5:40 PM IST (Updated: 31 July 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் பகுதியில் நாவல் பழ சீசன் தொடங்கி உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

நத்தம்:
நத்தம் அருகே உள்ள பரளி, வத்திப்பட்டி, முளையூர், மலையூர், காசம்பட்டி, புன்னப்பட்டி, பட்டணம்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர் உள்பட பல கிராமங்களில் விவசாயிகளின் பராமரிப்பிலும், மானாவாரியாகவும் நாட்டு நாவல் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நாவல் மரங்கள் வருடத்துக்கு ஒரு முறை மகசூல் தரும். ஜூலை மாத கடைசியில் தொடங்கிய நாவல் பழம் சீசன் இந்த மாதம் கடைசியில் முடிகிறது. நாவல் பழங்கள் சில்லரை விலையாக 1 கிலோ ரூ.150-க்கு விற்பனையாகிறது. இங்கு விளையும் நாட்டு நாவல்பழங்கள் திண்டுக்கல், மதுரை, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேன்களில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாவல் பழத்தை சிறியவர் முதல் பெரியவர்கள் வரையிலும், சர்க்கரை நோயாளிகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

Next Story