சேவல்வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு


சேவல்வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு
x
சேவல்வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு
தினத்தந்தி 31 July 2021 7:55 PM IST (Updated: 31 July 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

சேவல்வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

துடியலூர்

கோவை கவுண்டம்பாளையம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் (வயது 57). இவரது மனைவி அல்போன்சா (52). இவர்கள் தங்களது வீட்டு மொட்டை மாடியில் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டு வாலிபர்கள் அங்கு வந்து அல்போன்சாவிடம் சேவல் குறிப்பிட்ட பணம் கொடுத்து சேவல்கள் வாங்கிச்சென்றனர். அப்போது அவர்கள் அப்போன்சாவின் கணவர் ஜோசின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு  சென்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று அந்த 2 வாலிபர்களும் ஜோசுக்கு போன் செய்து சமையல் ஆர்டருக்கு சேவல்கள் தேவைப்படுவதாகவும்,  துடியலூர் பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் நீங்கள் இங்கு வந்தால் சமையல் ஆர்டர் குறித்து பேசலாம் என்றனர். 

இதை நம்பிய ஜோஸ் உடனே அங்கு புறப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் ஜோஸ் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு அவரது வீட்டுக்கு அந்த 2 வாலிபர்களும் சென்றனர். 

அங்கிருந்த  அல்போன்சாவிடம் சேவல் வாங்குவது போல நடித்து அவரது கழுத்தில் இருந்த 5 தங்கச் செயினை பறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

அதற்குள் அந்த 2 வாலிபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து அல்போன்சா துடியலூர் போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்குப்பதிவு நகையை பறித்து சென்ற வாலிபர்களை  வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story