இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நலத்திட்ட உதவிகள்


இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 31 July 2021 8:52 PM IST (Updated: 31 July 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

இணையதளம் மூலம் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆணைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயதேவ்(வயது12). மாற்றுத்திறனாளியான இவர் தனக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கோரி இணையதளம் மூலம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனுக்கு கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் சிறுவன் ஜெயதேவ்வை கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து உதவிகள் வழங்கினார்.

அப்போது அந்த சிறுவனுக்கு ரூ.6,700 மதிப்பிலான சக்கர நாற்காலி், மற்றும் சிறுவனின் உடலில் பல பகுதிகளில் காயங்கள் உள்ளதை கருத்தில் கொண்டு அவன் தூங்க வசதியாக ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தண்ணீர் படுக்கை ஆகியவற்றை வழங்கினார். மேலும், அந்த மாணவனின் தாயார் தையல் தொழில் செய்து வருவதால் ரூ.6287 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரத்தை வழங்கினார்.

அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் இருந்தார்.

Next Story