காங்கேயம் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
காங்கேயம் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
காங்கேயம்:
காங்கேயம் அருகே நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆனது.
பஞ்சு மில்லில்
காங்கேயத்தை அடுத்துள்ள படியூர்-ஒட்டபாளையம் செல்லும் சாலை பகுதியில் ரஷீத்அலி (வயது 62) என்பவர் கழிவுப்பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில்லை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். இந்த நூல் மில்லில் 50 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீர் என பஞ்சு அரைக்கும் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதை கவனித்த தொழிலாளர்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பின்னர் உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்துசேதம்
தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.
பின்னர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் நூல், பஞ்சுகள், எந்திரம், கட்டிடம் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story