ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை வாரம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, நகராட்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியவகைள் தங்கள் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் வருகிற 8-ந் தேதி வரை ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்
Related Tags :
Next Story