மகளிடம் தகராறு செய்ததை தடுத்த கணவன் மனைவிக்கு கத்திக்குத்து தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு


மகளிடம் தகராறு செய்ததை தடுத்த கணவன் மனைவிக்கு கத்திக்குத்து தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 July 2021 9:56 PM IST (Updated: 31 July 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

மகளிடம் தகராறு செய்ததை தடுத்த கணவன் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரூர்:
அரூர் அருகே உள்ள சுமைதாங்கிமேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலி (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக அஞ்சலி தனது மகன், மகளுடன் பையர்நாயக்கன்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் சுரேஷ் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை தகாத வார்த்தையால் திட்டி அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சலியின் தந்தை சென்னகிருஷ்ணன், தாயார் சின்னப்பாப்பா ஆகியோர் வந்து தடுத்துள்ளனர். அப்போது அவர்களை சுரேஷ் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story