விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2021 10:07 PM IST (Updated: 31 July 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே கணவர் இறந்ததால் விரக்தி அடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பரமேஸ்வரி(வயது 35). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு குமார் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் பரமேஸ்வரி விரக்தியுடன் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து பரமேஸ்வரியின் சகோதரர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story