விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சற்குணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், ஏட்டுகள் ராம்குமார், சசிக்குமார், புனிதா ஆகியோர் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜாமணி மகன் ரமணி (வயது 42) என்பதும்,
இவர் கடந்த 28-ந் தேதி விழுப்புரம் திருக்காமு நகரில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியையான விழுப்புரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி தீபா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ரமணி, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 8 வழிப்பறி சம்பவங்களிலும், கடலூர் புதுநகர் பகுதியில் ஒரு வழிப்பறி சம்பவத்திலும், புதுச்சேரி மாநிலத்தில் 2 இடங்களிலும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ரமணியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 3 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story