பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்


பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 31 July 2021 11:05 PM IST (Updated: 31 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் தொகுதியில் பொதுமக்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் தொகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கோரிக்கை மனு

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பகுதியான வரண்டியவேல் கிராம பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மனுக்களையும் பெற்றார். நிகழ்ச்சிக்கு வரண்டியவேல் கிராம பஞ்சாயத்து தலைவி வசந்தி ஜெயக்கொடி தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் முன்னிலை வகித்தார். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார் வரவேற்று பேசினார்.

எந்நேரத்திலும் குறைகளை தெரிவிக்கலாம்

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்களை பெற்று அதனை தொகுதியின் கட்சி அலுவலகம் அமைந்துள்ள தண்டுபத்தில் 3 ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் 5 பேர் கொண்ட குழு மனுக்களை இலாகா வாரியாக பிரித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து 10 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு இதுதொடர்பான நடவடிக்கைகளை தெரிவிப்பார்கள். இங்கு சாலை போடும் பணி இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் முடிவடையும். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு பின்பு மறுகால் ஓடை தூர்வாருதல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மக்கள் எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், கட்சி அலுவலகம் அமைந்துள்ள தண்டுபத்திலும் சந்தித்து உங்களது நியாயமான குறைகளை தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தாசில்தார் முருகேசன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அதிகாரி கருப்பசாமி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயக்கொடி, வரண்டியவேல் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் அருண், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துமாலை, ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முருகப்பெருமாள், மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க துணை தலைவர் விமல்சன், வரண்டியவேல் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் துரைசிங், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ரகுராம், மாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அன்னமரியான், மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மோகன், ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குருகாட்டூர்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களான குரு காட்டூர், சேதுக்குவாய்த்தான் உட்பட பல கிராமங்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள், அமைச்சரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் இசக்கி ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், குருகாட்டூர் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் புஷ்பராணி, ஒன்றிய துணைச் செயலாளர் கோட்டூர் கோவில், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் ஆஸ்கார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story