கிராம உதவியாளரை உப்பு மீது முட்டிபோட வைத்து தாக்குதல்

ஆவுடையார்கோவில், ஆக.1-
ஆவுடையார்கோவிலில் மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த கிராம உதவியாளரை முட்டிபோட வைத்து தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உப்பில் முட்டிபோட வைத்து தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள தாழனூர் கிராம உதவியாளர் பெரியசாமி. இவர் மணல் கடத்தல் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெரியசாமி ஆவுடையார்கோவில் மருத்துவமனை வழியாக சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் மணல் கடத்தல் பற்றி எதற்கு அதிகாரிகளுக்கு தெரிவித்தாய் என கூறி, தரையில் உப்பை கொட்டி அதன்மீது பெரியசாமியை முட்டிபோடவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பெரியசாமி சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டம்
இதைஅறிந்த ஆவுடையார்கோவில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர், கிராம உதவியாளரை தாக்கிய கும்பலை கைது செய்ய கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வேத செல்வம் தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர். அதன்பேரில் ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story