தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மாட்டு வியாபாரி படுகாயம்


தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மாட்டு வியாபாரி படுகாயம்
x
தினத்தந்தி 31 July 2021 11:30 PM IST (Updated: 31 July 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி மாட்டு வியாபாரி படுகாயம் அடைந்தார்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). மாட்டு வியாபாரி. இவர் மாடு வாங்குவதற்காக கரடிக்கல் கிராமத்தில் இருந்து மாடக்கல் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றார். 
அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த ஒரு யானை வெங்கடேசை திடீரென தாக்கியது. இதில் படுகாயமடைந்து கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஜவளகிரி வனச்சரகர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வெங்கடேசை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜவளகிரி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி மாட்டு வியாபாரி படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story