பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பலி


பட்டாசு ஆலை வெடி விபத்தில்  தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பலி
x
தினத்தந்தி 1 Aug 2021 12:35 AM IST (Updated: 1 Aug 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். சிதைந்து மரத்தில் தொங்கிய அவரது உடல் மீட்கப்பட்டது.

சிவகாசி, 
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். சிதைந்து மரத்தில் தொங்கிய அவரது உடல் மீட்கப்பட்டது.
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலைைய திருத்தங்கலை சேர்ந்த சக்தி அய்யனார் என்பவர் நடத்தி வந்தார். 
நேற்று காலையில் வழக்கம் போல் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது. 
அங்கு பட்டாசுகளுக்கு ரசாயன மருந்து செலுத்தும் அறையில் மீனம்பட்டி ஜான்சிராணி காலனியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 60) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அந்த அறை தரைமட்டமானது. இதில் தொழிலாளி ஆனந்தராஜ் தூக்கி வீசப்பட்டு பலியானார். அவரது உடல் சிதைந்து, அருகில் இருந்த மரத்தில் தொங்கியது.
விசாரணை
இந்த விபத்து குறித்து அந்த ஆலை நிர்வாகம் சார்பில் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
பின்னர் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 
வெடி விபத்தால் ஏற்பட்ட தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மரத்தின் கிளைகளில் சிக்கி கொண்ட  தொழிலாளி ஆனந்தராஜின் உடலை மீட்டனர். 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் சிவஜோதி, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த ஆலைக்கு சென்று விசாரணை நடத்தினர். இ்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

Related Tags :
Next Story