ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
அருப்புக்கோட்டை அருகே ரூ.1 லட்சம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ரூ.1 லட்சம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் தெற்குப்பட்டி தெருவில் ஆத்தியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி முத்து மற்றும் பேச்சி முத்து பாண்டி ஆகியோரின் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மூடை, மூடையாக புகையிைல பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தந்தை - மகன் கைது
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ஆத்தியப்பன் மற்றும் அவரது மகன் ஆனந்தகுமார் (வயது 31) ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.9 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story