தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2021 12:44 AM IST (Updated: 1 Aug 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 26). இவருக்கும் சேனையாபுரம் காலனியை சேர்ந்த ராமசுப்பு மகள் துர்கா என்பவருக்கும் கடந்த 27.11.2020-ல் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி இரவு வீட்டுக்கு வந்த போது இசக்கிராஜா மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனவருத்தம் அடைந்த துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த இசக்கிராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை காளிராஜன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story