மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலி + "||" + A young man who was practicing suffocation in a well was killed

கிணற்றில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலி

கிணற்றில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலி
காவல்துறையில் சேர கிணற்றில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தை சேர்ந்த வின்ெசன்டின் மகன் லியோ ஆண்டனி (வயது 21). இவர் காவல்துறையில் சேர முயற்சித்து வந்தார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட உடல் தகுதி தேர்வில் அவர் கலந்து கொண்டு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று முதுவத்தூர் அருகே உள்ள குணசேகரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் லியோ ஆண்டனி நீச்சல் பயிற்சி மேற்கொண்டார். அப்போது தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கி பயிற்சி செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவர் நீருக்குள் இருந்து வெளியே வராததை கண்டு, அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்று நீருக்குள் இருந்து லியோ ஆண்டனியின் உடலை மீட்டனர். வெங்கனூர் போலீசார், லியோ ஆன்டனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் சாவு
பண்ருட்டி அருகே தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
2. மயங்கி கிடந்த டெய்லர் சாவு
விருதுநகரில் மயங்கி கிடந்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
3. கிரேன் மோதி முதியவர் பலி
சிவகாசியில் கிரேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. கிணற்றில் முதியவர் பிணம்
சிவகாசி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
5. லாரி டிரைவர் திடீர் சாவு
லாாி டிரைவர் திடீரென இறந்தார்.