கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம்; பிரகலாத் ஜோஷி பேட்டி


கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம்; பிரகலாத் ஜோஷி பேட்டி
x
தினத்தந்தி 1 Aug 2021 1:55 AM IST (Updated: 1 Aug 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

  கர்நாடகத்தில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மந்திரிசபையில் யாரை சேர்ப்பது, 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிகளாக யாரை நியமித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து விரிவாக ஆலோசித்து மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மந்திரிசபை விரிவாக்கத்தில் காலதாமதம் ஏற்படாது. கூடிய விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.

  மந்திரிசபையில் இடம் பெற தனக்கு விருப்பம் இல்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். அவர் ஏற்கனவே முதல்-மந்திரியாக பதவி வகித்தார். எடியூரப்பா மூத்த தலைவர் என்பதால், அவரது மந்திரிசபையில் சேர்ந்து ஜெகதீஷ் ஷெட்டர் பணியாற்றினார். தற்போது அவரை மந்திரிசபையில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிட தலைவர்கள், அவருடன் ஆலோசிப்பார்கள். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும்.
  இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.

Next Story