சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 36-வது வார்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள், தங்களுடன் முன்கள பணியாளராக பணிபுரிந்த ஒருவர், சக பணியாளர்களின் சம்பளம் மற்றும் குழு சேமிப்பு பணம் ரூ.79 ஆயிரத்து 200-ஐ கையாடல் செய்ததாகவும், பணிக்கு வராத பெண் ஊழியர்களின் கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற்று முறைகேடு செய்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்களை எழுப்பினர். சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். இதில் 36-வது வார்டில் பணிபுரியும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, முறைகேடு புகாரில் சிக்கிய முன்கள பணியாளரை மாநகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story