கொங்கணாபுரத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.
எடப்பாடி,
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் பல்வேறு கிராமங்கள், மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து கலந்து கொண்டனர். மொத்தம் 8 ஆயிரம் மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது. பி.டி.ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 299 முதல் ரூ.8 ஆயிரத்து 189 வரையும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 699 முதல் ரூ.10 ஆயிரத்து 329 வரையும் ஏலம் போனது. ரூ.2 கோடியே 60 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து நடந்த எள் ஏலத்தில் வெள்ளை எள் ஒரு கிலோ ரூ.84.60 முதல் ரூ.104.90 வரையும், சிவப்பு எள் ரூ.83 முதல் ரூ.101.20 வரையும் ஏலம் போனது. மொத்தம் 90 மூட்டை எள் ரூ.6 லட்சத்துக்கு ஏலம் சென்றது.
Related Tags :
Next Story